கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!




கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு

சீமானுடன் சீதையின் மைந்தன், ஆற்றலரசு

18301025_1940843246149553_7870101349096257952_n

10-05-2017 அன்று சென்னையில் கச்சத்தீவு மீட்பு இயக்கம் முன்னெடுக்கும் “கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா” நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம்.

10-05-2017 அன்று கண்ணகி கோவில் விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிறிதொரு நாளில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நமது நூலை தமது கட்சி சார்பாக நூல் அறிமுக நிகழ்வு ஒன்றினை தமது அலுவலக உள்ளரங்கத்திலேயே நடத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருமிகு. சீமான் அவர்களுக்கு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

சீதையின் மைந்தன்
தாயகத்தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்

Comments are closed.