கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!




தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன் நேரில் சந்திப்பு:

கச்சத்தீவு மீட்பு இயக்கம் 10.05.2017 சென்னையில் முன்னெடுக்கும் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வில் வெளியிட உள்ள ”இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பிக்குமாறு, ஆற்றலரசு அவர்களுடன் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டோம். முன்னரே ஒப்புக்கொண்ட வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இயன்றவரை நமது நிகழ்ச்சியில் பங்கேற்க முயல்வதாகவும், இயலாவிடினும் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்நூலின் அறிமுக கூட்டங்களில் தான் நிச்சயம் கலந்து கொள்வதாகவும், நமது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி!!.

சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்

Comments are closed.